Tuesday, 9 August 2016

சோலார் பம்பு செட்

சோலார் பம்பு செட் அமைக்க தமிழக அரசு 80% மானியம்!!!-விவசாயிகளுக்கு தெரிய படுத்துங்கள் நண்பர்களே!!!

சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு தமிழக அரசு மானியம் அளிக்க முடிவெடுத்துள்ளது. தங்களது நிலங்களில் உள்ள ஆழதுளை கிணறுகளிலிருந்து நீர் இறைக்க தற்போது மின்சாரத்தையே நம்பி இருக்கும் விவசாயிகள் இந்த திட்டத்திற்கு மாறிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ளும் விவசாயிகளுக்கு 80 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். 20 சதவிகித தொகையை மட்டும் விவசாயி தனது பங்களிப்பாக செலுத்தினால் போதும்.

ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் வைத்துள்ள விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். ஆழ்துளை கிணற்றில் அமைக்க ரூ.4,39,950, திறந்த வெளி கிணற்றில் அமைத்துக் கொள்ள ரூ.5,01,512 எனவும் விலை நிர்ணயித்துள்ளது. இந்த தொகையில் 20 சதவிகிதம் மட்டும் விவசாயிகள் கட்டினால் போதுமானது.
தவிர இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம, தெளிப்பு நீர் பாசனம் என்கிற முறைகளை மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கு ஏற்கனவே அரசு மானியம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பயன்பெற விரும்பும் விவசாயிகள் அதற்கான ஆதாரங்களுடன் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, அல்லது வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை அணுக வேண்டும். அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து அனுமதி அளிப்பார்கள் என தெரிவிக்கபட்டுள்ளது. மின்வெட்டு பிரச்னையிலிருந்து இனி விவசாயயிகளுக்கு விடுதலைதான்.

கூடுதல் தகவல்களுக்கு:
Agricultural Engineering Department,
487, Anna Salai, Nandanam,
Chennai - 600 035.
Phone - 044 - 2435 2686, 044- 2435 2622

Thursday, 4 August 2016

நாட்டுப் பசு காளை

நாட்டு மாடுகள்:

அழிக்க நினைப்பவர்களை விட நமக்கு வலிமை அதிகம்!

ஜல்லிக்கட்டு தடைக்கும் காளைகளின் அழிவுக்குமான உறவை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, மாட்டு வேடிக்கை போன்ற விழாக்கள் மட்டுமே  காளைகளை வளர்ப்பதற்கான தேவைகளாக உள்ளன. இவ்விழாக்கள் தடுக்கப்பட்ட நிலையில் காளைகளை வளர்ப்பது ‘தேவையற்ற செயல்’ என்ற நிலை உருவாகியுள்ளது. ஏர் உழவும், மாட்டு வண்டிகளும் அரிதாகிக்கொண்டுள்ளதால் காளைக் கன்றுகளைக் கறி வெட்டுக்கு அனுப்புவதைத் தவிர வேறு வழி இல்லை என்றாகிவிட்டது.

காரணங்களைக் கடந்தும் ஓர் உயிரினத்தைப் பாதுகாக்க நினைப்பதுதான் உண்மையான அன்பு. காளைகளால் எந்தப் ‘பயனும்’ இல்லை என்ற எண்ணமே பாவம். இவ்வாறு, எந்தப் பலனும் எதிர்பாராமல் காளைகளைக் காக்க வேண்டும் என்ற எண்ண கொண்டோரிடம் சில வழிகாட்டுதல்களை முன் வைக்க விரும்புகிறேன்.

1. நாட்டு மாடுகளின் வகை இனப் பெயர்களை முதன்மைப்படுத்துவதை நிறுத்துங்கள். மாட்டு வகையினத்தைக் குறிப்பிடுங்கள். அவ்வகையின் சிறப்புகளைப் பற்றி விவரிக்காதீர்கள். மாட்டு வகைகளைப் பற்றி அதிகமாகப் பேசியும் எழுதியும் அவற்றின் சந்தை மதிப்பு நியாயமற்ற வகையில் அதிகரித்துவிட்டது. மாடுகளின் வகையினம் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். அவ்வகைகளின் சிறப்புகளை, தனித்தன்மைகளைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். அதேவேளை, அவ்வினங்களின் சிறப்புகளைச் சந்தை மதிப்பிற்காக உயர்த்தும் வழக்கம் ஒழிய வேண்டும்.

காங்கேயம் காளைகளை இப்போது பணக்காரர்கள் மட்டுமே வாங்க இயலும். இதன் காரணம், காங்கேயம் காளைகளின் ’பெருமைகளை’ அளவுக்கதிகமாகப் பரப்பியதுதான். இதே நிலை மற்ற நாட்டு மாடுகளுக்கும் உருவாகாமல் பார்த்துக்கொள்வது உடனடித் தேவை. எல்லா நாட்டு மாட்டினங்களும் சிறப்பானவைதான். ஒவ்வொரு வகையினமும் ஒவ்வொரு வகையில் தனித்தன்மை கொண்டது. இனப் பெயர் என்பது அடையாளத்திற்கானதுதானே தவிர, சந்தை மதிப்பை அதிகரிக்கச் செய்வதற்கானதல்ல.

2. நாட்டு மாடுகளின் பாலில் உள்ள சத்துகளை கொண்டு அவற்றைத் தரம் பிரிக்கும் செயல் மிகப் பெரிய சூதாட்டத்திற்கான முன்னோட்டம். நாட்டுப் பசுக்களின் விலையை மிக அதிகமாக உயர்த்தவும், நாட்டுப் பசும்பாலை ஏற்றுமதி செய்யவும் இம்மாதிரியான கருத்துகள் பரப்பப்படுகின்றன. இந்த நிலைமையை அனுமதித்தால் இன்னும் சில காலத்தில் நாட்டுப் பசும்பால் பெரும்பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்ற நிலை உருவாகிவிடும். ஏற்கெனவே மாநகரங்களில் இந்த நிலை உருவாகிக்கொண்டுள்ளது.

3. வீதிகளில் திரியும் நாட்டுக் காளைக் கன்றுகளை வாங்கி, உங்கள் பண்ணைகளில் வளர்க்கத் துவங்குங்கள். அக்கன்றுகள் எந்த வகையைச் சேர்ந்தவையாக இருந்தாலும் பரவாயில்லை.

4. வேளாண்மை செய்வோர், பண்ணைகள் வைத்திருப்போர் காளைகளைப் பாதுகாப்பதற்கென்று தனி அக்கறை செலுத்துங்கள். உங்களால் இயன்ற அளவுக்குக் காளைகளைப் பராமரிக்க முன்வாருங்கள். இவ்வாறான செயல்பாட்டினால், நாட்டுப் பசுக்களுக்குப் புணர்ச்சி இணை கிடைப்பது எளிதாகும். காளைகளைப் பராமரிப்பதனால் என்ன பலன் எனச் சிந்திப்போர் இப்பணியிலிருந்து விலகிவிடுவது நல்லது. ஏனெனில், இது ஓர் உயிரின வகை அழியாமல் காக்கும் பணி. வணிக நோக்கங்கள் இல்லாதவர்கள்தான் இப்பணியை நேர்மையாகச் செய்வார்கள்.

5. காளைகளைப் பராமரிப்பதில் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. கன்றுக் குட்டிகளாக வாங்கி, அவற்றுடன் நன்கு பழகுவது அடிப்படையானது. பழகுவோரிடம் மட்டுமே காளைகள் இணக்கமாக இருக்கும். மூக்கணாங்கயிறு போடுவது போன்ற கட்டுப்பாட்டுச் செயல்களை அனுபவம் மிக்கோருடன் சேர்ந்து செய்ய வேண்டும். காளைகளுக்கான தீவனத்திலும் அக்கறை காட்ட வேண்டும். மரபுவழிப்பட்ட தீவனங்களைப் பண்ணையத்திலேயே வளர்ப்பதுதான் சரியான செயல். அவற்றைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ளுங்கள்.

6. உங்களிடம் நிலம் இல்லை; ஆனால் காளைக் காப்புப் பணியில் ஈடுபடும் விருப்பம் உள்ளது என்றால், நன்கு தெரிந்த பண்ணையங்களுக்குக் காளைகளை வாங்கித் தாருங்கள். அவற்றின் பராமரிப்புகளுக்கான ஒத்துழைப்புகளைச் செய்யுங்கள்.

7. கிராமக் கோயில்களுக்கென காளைகளை வளர்க்கும் வழக்கம் இப்போதும் உள்ளது. இவ்வழக்கம் சரியாகக் கடைபிடிக்கப்படும் கிராமக் கோயில்களுக்குக் காளைகளை வாங்கித் தருவதும் சிறந்த செயலாகும். கோயில் காளைகள் வழியாகத்தான் பெருமளவு நாட்டு மாடுகள் காக்கப்பட்டு வருகின்றன.

8. ஜல்லிக்கட்டு தடைக்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்குப் பின்னால் பன்னாட்டு வலைப்பின்னல் உள்ளது. கோக் நிறுவனம் இப்போது, பால் வணிகத்திற்குள் நுழைந்துள்ளது. இன்னும் பலர் வருவார்கள்.

9. நாட்டுப் பசுக்களை அழிப்பது பெருநிறுவனங்களின் நோக்கம் அல்ல. அவற்றை எல்லாம் தமது நிறுவனங்களின் காப்புரிமைச் சொத்துகளாகவும், தமது பண்ணை உடைமைகளாகவும் வைத்துக்கொள்வதுதான் எல்லாப் பெருநிறுவனங்களின் கனவு. ஜல்லிக்கட்டுத் தடைக்கான அமைப்புகள் கோக், ஆரோக்யா போன்ற பெரு நிறுவன பண்ணைகளுக்குள் நுழைந்து அங்கு நிகழும் விதிமீறல்களைப் படம் பிடித்ததாகப் பதிவுகள் இல்லை. கிராமங்களில் நிகழும் மாட்டு வேடிக்கைகளைப் படம் பிடித்து ஊடகங்களில் ஊளையிடுவது அவர்கள் வழக்கம்.

10. தீமைகளுடன் போராடுவதைக் காட்டிலும் நன்மைகளை வளர்ப்பதுதான் சரியானது என்று புரிந்துகொண்டவன் நான். நெருப்பு தணிய வேண்டுமெனில் நீர் மிக வேண்டும். காளைகளைப் பாதுகாப்பது ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அல்லது அரசியல் அமைப்புகளின் கடமை என்று நினைத்துக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள். இது நம் அனைவருக்குமான பொறுப்பு. ஜல்லிக்கட்டு போன்ற காளை விளையாட்டுகளின் மரபுவழி உரிமைகளை மீட்பது சரியானதுதான். அதேவேளை,  காளைகளையும் பசுக்களையும் பாதுகாப்பதற்கு நம்மாலான வேலைகளைச் செய்வது இன்றியமையாதது.

11. காளைக் காப்பகங்களை உருவாக்க முன்வாருங்கள்.

12. பால் பயன்பாட்டினை வரையறுத்து வாழுங்கள். அளவுக்கதிகமான பால் பயன்பாடுதான் இந்த எல்லாச் சீர்கேடுகளுக்கும் மூலகாரணம். தனியார் பால் பொருட்களை நிராகரிக்கத் துவங்குங்கள். தனியார் மூலதனம் பால் சந்தையில் குவிந்த பின்னர்தான் நாட்டு மாடுகள் அழியும் நிலை உருவானது.

மேற்கண்ட செயல்களில் நீங்களே நேரடியாக ஈடுபட முடியும். எல்லாச் சிக்கல்களுக்குமான தீர்வுகள் உங்களிடம் உள்ளன. காளைகளையும் பசுக்களையும் காக்க வேண்டும் என்ற உங்கள் அன்பும் அக்கறையும் உணர்ச்சி வெளிப்பாடுகளாக மட்டும் இருந்துவிட வேண்டாம். அவை செயல் வடிவம் பெற வேண்டும்.

இது நமக்கான பூமி. நம்மைச் சுற்றிலும் வாழும் உயிர்கள் நம்மோடு இணைந்து வாழும் வகையில் படைக்கப்பட்டுள்ளன. எல்லா உயிர்களையும் காக்கும் பொறுப்பும் நமக்கு வழங்கப்பட்டுள்ளது. நமது வாழ்க்கையில் செய்யும் சின்னஞ்சிறிய மாற்றங்கள், புவிச் சூழலில் பெரிய முன்னேற்றங்களை நிகழ்த்தவல்லவை என்பதை மனதில் கொள்ளுங்கள்.

Monday, 11 July 2016

கத்திரி சாகுபடி

இயற்கை முறை கத்திரி சாகுபடி: ( தினமலரில்)

சாகுபடிக்கு முதலில் தேவைப்படுவது நாற்றங்கால். இதன் பரப்பு 25 அடிநீளம், 4 அடி அகலம், 4 அங்குலம் உயரம் கொண்டதாக இருக்க வேண்டும்.
நாற்றங்காலுக்கு 500 கிலோ நன்கு மக்கிய தொழுஉரம் இடவேண்டும்.
இதோடு இயற்கை உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா இவைகளை ஒரு கிலோ வீதம் போடவேண்டும்.
காய்கறி செடிகளில் தோன்றும் மிகக்கொடிய வாடல் நோயினைக் கட்டுப்படுத்த டிரைக்கோடெர்மா விரிடி என்னும் இயற்கை சம்மந்தப்பட்ட பூசணக் கொல்லி ஒரு கிலோ அளவினை நாற்றங் காலுக்கு இட்டு மண்ணினை நன்கு கொத்திவிட வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு 200 கிராம் விதை விதைக்க வேண்டும்.
நாற்றங்காலைத் தொடர்ந்து நடவு வயல் தயாரிப்பதற்கு நல்ல கவனம் தரவேண்டும்.
நடவு வயலில் நல்ல வடிகால் வசதி உண்டாவதற்காக உளி கலப்பை கொண்டு உழவேண்டும். பிறகு நன்கு மக்கிய தொழு உரம் 15 டன் போட்டு நிலத்தை உழுது பார்சால் போடவேண்டும். (இரண்டரை து 2 அடி) நாற்றங்காலில் இருந்து நல்ல திடமான 28 நாள் வயதுடைய நாற்றினை எடுத்து நடவு வயலில் நடவேண்டும். (பாருக்கு பார் இரண்டரை அடி, செடிக்கு செடி 2 அடி).
நடவு நட்ட 21, 42, 63, 84 ஆகிய நாட்களில் ஒவ்வொரு முறையும் ஒரு டன் மக்கிய தொழு உரம், ஒரு கிலோ பாஸ்போபேக்டீரியா, ஒரு கிலோ டிரைகோடெர்மா விரிடி இவைகளைக் கலந்து வயலில் இட்டு பாசனம் செய்ய வேண்டும்.
செடிகளுக்கு கவனமாக பயிர் பாதுகாப்பு செய்ய வேண்டும். நடவு நட்ட மூன்று வாரம் கழித்து மாதம் இருமுறை உயிர் பூச்சிக்கொல்லி மருந்துகளான பவேரியா, பாசியானாவை ஒரு லிட்டர் தண்ணீருக்கு மூன்று மில்லி அளவு கலந்து தெளிக்க வேண்டும்.இந்த மருந்தானது செடிகளைத் தாக்கும் காய்ப்புழுக்களுக்கு வியாதியை உண்டாக்கி கடுவிரைவில் அவைகளை மடியச் செய்துவிடுகின்றது.
இதைத் தொடர்ந்து இலைகளுக்கும் தண்டுகளுக்கும் பூக்களுக்கும் ஏற்படும் பூச்சிகளின் சேதத்தைத் தவிர்க்க வாரம் ஒரு முறை பைட்டோபிராட் என்னும் இயற்கை பூச்சி விரட்டியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி அளவு கலந்து தெளிக்கவும்.
இந்த இரண்டு இயற்கை மருந்துகளும் வெகு சிறப்பாக செயல்பட்டு விவசாயிகள் விஷ மருந்துகளை உபயோகிப்பதிலிருந்து காப்பாற்றுகின்றன.
வளரும் செடிகளுக்கு காலத்தில் பாசனம் செய்ய வேண்டும். இயற்கை முறையை அனுசரிக்கும்போது பாசன செலவில் மிச்சம் ஏற்படும். பாசன நீர் கிரகிக்கப்பட்டு பூமி உலர்ந்தவுடன் ஆட்களை வைத்து கத்தரி செடிகø சுற்றி பூமியைத் தளர கொத்திவிட வேண்டும். உடனே மக்கிய தொழு உரத்தை பூமிக்கு இட்டு பாசனம் செய்யலாம்.
விவசாயிகள் தாங்கள் சேகரித்துள்ள தொழு உரத்தை அவ்வப்போது மேலே விவரித்தபடி செடிகளுக்கு இட்டுவர வேண்டும். இதனால் செடிகள் வெகு செழிப்பாக வளர்ந்து வருகின்றன.
மேற்கண்ட பணிகளை கவனத்தோடும் நம்பிக்கையோடும் செய்யும்போது கத்தரி செடிகள் நட்ட 75வது நாளிலிருந்து 120 நாட்கள் வரை அறுவடை கொடுத்துக் கொண்டிருக்கும்.
ஒரு ஏக்கரில் 65 கிலோ கொண்ட மூடை 135 கிடைக்கும். இயற்கை முறை சாகுபடியில் ஏக்கருக்கு ஆகும் செலவு ரூ.22 ஆயிரம் ஆகும். காய்கள் விற்பனையில் வரவு ரூ.68 ஆயிரம் கிடைக்கும். சாகுபடி செலவு போக ஏக்கரில் நிகர லாபம் ரூ.46 ஆயிரம் கிடைக்கும்.
ரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்து அடிக்கும் சாகுபடி முறையில் சாகுபடி செலவு அதிகரித்துக்கொண்டே வரும். ஆனால் கத்தரி மகசூல் அதிகரிக்காது
இயற்கை முறை சாகுபடி தொடர்ந்து செய்யும்போது சாகுபடி செலவு படிப்படியாக குறைந்துவிடும். ஆனால் கத்தரி மகசூல் அதிகரிக்கும். இதனால் சாகுபடியில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். இனி எதிர்காலத்தில் நீண்டகால சாகுபடிக்கு இயற்கை முறை சாகுபடிதான் ஏற்றது.

Thursday, 7 July 2016

யானைவிரட்ட

விவசாயிகள் கவனத்திற்கு...
ஆப்பிரிக்க விவசாயிகள் எல்லோரும் விலங்கியலாளர் டாக்டர் லூசி கிங்குக்கு நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆப்பிரிக்க யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து, பயிர்களை நாசம் செய்வது அங்கே வழக்கமான விஷயமாக இருந்து வந்தது. அவர்களின் பிரச்சினையைத் தீர்க்க ‘யானைகளும் தேனீக்களும்’ என்ற பிராஜக்டை உருவாக்கினார் லூசி. யானைகளுக்கு வேல மரங்கள் என்றால் பிடிக்காது, காரணம் அந்த மரங்களில் தேனீக்கள் கூடு கட்டியிருப்பதுதான். பல ஆண்டுகள் யானைகளை ஆராய்ச்சி செய்த பிறகு, தேனீக்களுக்கு யானைகள் பயப்படுவதைக் கண்டுபிடித்தார் லூசி.

விவசாய நிலங்களைச் சுற்றிலும், 30 மீட்டர் இடைவெளியில் தேனீ வளர்ப்பு தொட்டிகளை வைத்தார். விளைந்திருக்கும் பயிர்களின் வாசத்தை வைத்தே யானை அந்த இடம் நோக்கி வரும். அப்படி வரும் யானைகள் தேனீக்களின் ரீங்காரம் கேட்டவுடன் பின்வாங்கும். எல்லா கூடுகளும் ஒரே கம்பியால் இணைக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை தேன் கூட்டை யானை தொட்டுவிட்டால், கம்பி அதிர்வதன் மூலம் கூடுகளில் உள்ள தேனீக்கள் யானைகளைக் கொடுக்கால் தாக்க ஆரம்பித்துவிடும்.

யானை அலறியடித்துகொண்டு ஓடிவிடும். பிறகு இந்தப் பக்கமே வராது. ’’தேனீக்களை விளைநிலங்களில் வளர்ப்பதன் மூலம் விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் வருகிறது. யானைகளிடமிருந்து பயிர்களும் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றன. யானைகள் மிகச் சிறந்த உயிரினங்கள். அவற்றின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மின்சாரக் கம்பிகளைப் பயன்படுத்தினால் அது யானைகளுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தாகிவிடுகின்றன. தேன் கூடுகளால் வேலி அமைத்து விட்டால் மனிதர்கள், யானைகளுக்கு மட்டுமில்லை, இயற்கைக்கும் நல்லது’’ என்கிறார் லூசி கிங்.

‘’யானை ஒருநாளைக்கு 400 கிலோ உணவு சாப்பிடும். எங்க நிலத்துக்குள் நுழைந்தால் ஒன்றும் மிச்சம் இருக்காது. இதுவரை யானைகளைப் பார்த்தால் தகர டப்பாவால் தட்டுவோம், நெருப்புப் பந்தம் பிடிப்போம். இப்போது எங்களுக்கும் பிரச்சினை இல்லை, யானைகளுக்கும் பிரச்சினை இல்லை. வருமானமும் கூடியிருக்கிறது’’ என்று மகிழ்கிறார் ஒரு விவசாயி. இயற்கை, மனிதர்கள், யானைகள் என்று எல்லா வழியிலும் பிரமாதமான திட்டத்தை வகுத்து கொடுத்த லூசி கிங்குக்கு சர்வதேச விருதுகள் குவிகின்றன.

நம் ஊர் விவசாயிகளும் இந்தத் திட்டத்தைப் பின்பற்றணும்

நீர் நிலைகள் Water Bodies


 நாடும் நாட்டுமக்களும் நலமாக இருக்க பஞ்ச பூதங்களை வழிபாடு செய்திருக்கிறீர்களா நாடு நல்லாயிருந்தா நீங்களும் நல்லா இருப்பீர்கள் பெய்கின்ற மழை புரிந்து கொண்டு மந்திரத்தை சொல்லுவோம் அல்லது ப்ரார்த்தனை செய்வோம்

ஓம் ஜலபிம்பாய வித்மஹே 
நீல புருஷாய தீமஹி
தந்நோஹ் வருணஹ் ப்ரசோதயாத் 

உங்களால் முடிந்த அளவு சொல்லுங்கள் அலுவலகத்தில் இருந்தால் உணவு இடைவேளையில் தினந்தோறும்  சொல்லுங்கள்

+++++++++++++++++++++++++++++++++
இந்தக் காலத்தில் அந்தக் கால நீர் நிலைகள்!
Thanks:  #vikatan #விகடன்

தமிழகத்தின் தலை விதியை நிர்ணயிப்பதில் தண்ணீர் பிரச்சினை. தண்ணீரினை நம் முன்னோர்கள் பல வகைகளில் சேமித்து வந்தனர். நாடு செழிப்போடு இருப்பதற்கும் இந்த நீர் நிலைகள் உதவின. அந்த காலத்தில் பழக்கத்தில் இருந்த நீர் நிலைகள், அதன் கட்டமைப்பு போன்றவையே பின் வருபவை. இனிமேல் இவற்றை உருவாக்குவது என்பது எளிதில் இயலாத காரியம் என்பதால் கிடைக்கின்ற மழை நீரையாவது எளிதில் சேமிப்போம். நம் வாழ்வை செழிப்பாக்குவோம்.

01. அகழி - (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்

02. அருவி - (Water fall)மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது

03. ஆழிக்கிணறு -(நிலைகள்n Sea-shore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு

04. ஆறு -(River) - பெருகி ஓடும் நதி

05. இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்

06. உறை கிணறு -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு

07. ஊருணி -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை

08. ஊற்று - (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது

09. ஏரி -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம்

10. ஓடை -(Brook)அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்

11. கட்டுந் கிணக்கிணறு(Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு

12. கடல் -(Sea) சமுத்திரம்

13. கம்வாய்(கம்மாய்)-(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்

14. கலிங்கு -(Sluice with many Venturis)ஏரி முதலிய பாச்ன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.

15. கால் - (Channel) நீரோடும வழி

16. கால்வாய் -(Suppy channel to a tank )ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி

17. குட்டம் - (Large Pond) பெருங் குட்டை

18. குட்டை- (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை

19. குண்டம் -(Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை

20. குண்டு - (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.

21. குமிழி - (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு

22. குமிழி ஊற்று - (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று

23 . குளம் -(Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படும் நீர் நிலை.

24. கூவம் - (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு

25 . கூவல் - (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்

26. வாளி (stream) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.

27. கேணி--( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு

28. சிறை -(Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை

29. சுனை -(Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை

30. சேங்கை - (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம்

31. தடம் -(Beautifully constructed bathing tank)அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்

32 . தளிக்குளம் -(tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை.

33. தாங்கல் - (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்

34. திருக்குளம் - (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும்

35. தெப்பக்குளம் -(Temple tank with inside pathway along parapet wall)ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்

36. தொடு கிணறு -(Dig well) ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்

37. நடை கேணி - (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு

38. நீராவி -(Bigger tank with center Mantapam) மைய மண்டபத்துடன் கூடிய பெருங் குளம். ஆவி என்றும் கூறப்படும்

39. பிள்ளைக்கிணறு -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.

40. பொங்கு கிணறு -(Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு

41. பொய்கை -(Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை

42. மடு -(Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்

43. மடை -(Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு

44. மதகு -(Sluice with many venturis) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது

45. மறு கால் -(Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்

46. வலயம் -(Round tank) வட்டமாய் அமைந்த குளம்

47 வாய்ககால் -(Small water course) ஏரி முதலிய நீர் நிலைகள்...

Tuesday, 5 July 2016

மரபு விதைகள்

நம் தாய் மண்ணின் மரபு விதைகள்...

• 2014-16ஆம் ஆண்டுகளில் சேகரித்த 110க்கும் மேற்பட்ட
மரபு விதைகளை பகிர்ந்து கொள்கிறோம்...

தேவைப்படுவோர் பெற்றுக்்கொள்ளவும்.

தக்காளி:
• •அன்னஞ்சி தக்காளி
• • கொடி தக்காளி
• • மஞ்சள் காட்டுத்தக்காளி
• • சிவப்பு காட்டுத்தக்காளி

கத்தரி:
• *பச்சை கத்திரி
• *நெகமம் வரி கத்திரி
• *உடுமலை சம்பா கத்தரி
• *உடுமலை உருண்டை கத்தரி
• *திண்டுக்கல் ஊதா கத்தரி
• *மணப்பாறை கத்தரி
• *எலவம்பாடி கத்தரி அ வேலூர் முள் கத்தரி
• *சேலம் முள் கத்தரி
• *கண்ணாடி கத்தரி
• *நத்தம் கீரி கத்தரி
• *கும்கோணம் குண்டு கத்திரி
• *தொப்பி அ தக்காளி கத்தரி
• *கல்லம்பட்டி கத்தரி
• *நந்தவன பச்சை கத்தரி
• *கோபி பச்சை கத்தரி
• *ஊதா முள் கத்தரி
• *கொத்து கத்தரி
• *நாமக்கல் பொன்னு கத்தரி
• *வெள்ளை வரி கத்தரி
• *பச்சை குண்டு கத்தரி
• *வெண்வரி சம்பா கத்தரி
• *வெண்வரி உருண்டை கத்தரி
• *மணச்சநல்லூர் கத்தரி
• *காரமடை வரி கத்தரி
• *காரமடை ஊதா கத்தரி
• *கடவூர் உருண்டை கத்தரி
• *வெங்கேரி கத்தரி

மிளகாய்
• *சம்பா மிளகாய்
• *முட்டி மிளகாய்
• *காந்தாரி மிளகாய் சிறியது
• *காந்தாரி மிளகாய் பெரியது
• *குண்டு மிளகாய்
• *தோடு மிளகாய்

வெண்டை:
• *வெண்டைக்காய்
• *மலை வெண்டை
• *சிவப்பு வெண்டை

கொடி வகைகள்:
• • பாகல்
• • மிதி பாகல்

• குடுவை சுரை
• நீளச் சுரை
• கும்பச்சுரை
• ஆள் உயர சுரை
• உருட்டு சுரை
• செம்பு சுரை

• திருச்சி நீள புடலை
• தேனி நீள புடலை
• குட்டை புடலை
• பாப்பனூத்து தரை புடலை

• பச்சை பட்டை அவரை
• பெல்ட் அவரை
• கோழி அவரை
• செடி அவரை
• தம்பட்ட அவரை
• கொத்தவரை

• நீள பீர்க்கங்காய்
• மெழுகு பீர்க்கங்காய் அ நுரை பீர்க்கங்காய்

• வெள்ளை பூசணி
• கையளவு பூசணி
• சக்கரைப் பூசணி
• பரங்கிக்காய்

பொரியல் தட்டை
• வெள்ளை தட்டை

பல்லாண்டு ரகங்கள்:
• மரத்துவரை
• கருங்கண் பருத்தி
• கோவில்பட்டி முருங்கை
• • பப்பாளி
• சுண்டக்காய்
• நாட்டு ஆமணக்கு


மலைக்காய்கறி ரகங்கள்:
• • வெள்ளை முள்ளங்கி
• சிவப்பு முள்ளங்கி

• பீன்ஸ்
• வரி பீன்ஸ்
• கருப்பு பீன்ஸ்
• சிவப்பு பீன்ஸ்
• ரெட்டை பீன்ஸ்
• குத்துசெடி பீன்ஸ்
• இலங்கை பீன்ஸ்
• பச்சை பட்டாணி
• பழ வெள்ளரி
• வரி வெள்ளரி
• குமரி வெள்ளரி

கீரை ரகங்கள்
• அரைக்கீரை
• • முளைக்கீரை
• • பச்சை சிறுகீரை
• • சிவப்பு சிறுகீரை
• • பச்சை தண்டங்கீரை
• • சிவப்பு தண்டங்கீரை
• • பச்சை புளிச்சகீரை
• • சிவப்பு புளிச்சகீரை
• • மணதக்காளி கீரை
• • கொத்தல்லி
• • பருப்பு கீரை
• • பாலக்கீரை
• • அகத்திக்கீரை
• • காசினிக்கீரை
• • சிவப்பு முள் தண்டு கீரை
• பச்சை முள் தண்டு கீரை
• கொடி பசலைக்கீரை
• சவுரிக்கீரை
தொய்யக்கீரை
குப்பை கீரை

• மூலிகைகள்•
• பூனைக்காலி
தூதுவளை
• • முடக்கற்றான்
• • துளசி
• • திருநீற்றுப்பச்சிலை thaai basil & Italian basil
• *சதகுப்பை கீரை
• • செண்டுமல்லி அ துலுக்கசாமந்தி-மஞ்சள்-2ரகம்
• செண்டுமல்லி-ஆரஞ்சு-2ரகம்

விவசாயம் செய்யும் அளவிற்கு விதைகள் கிடைக்காது ..

வருங்காலத்தில் தங்களுக்கு தேவையான விதைகளை தாங்களே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும்.

பாரம்பரிய விதைகள் புழக்கத்திலேயே இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே விதைகள் கொடுக்கப் படுகிறது.

• அந்த பருவத்தில் விவசாயம் செய்ய....கடைகளைத் தேடி ஓடாமல் முந்தைய பருவத்திலேயே அதற்கான விதைகளை பக்குவமாக எடுத்து வைப்பது சிறந்தது..

மேலே குறிப்பிட்டுள்ள விதைகள் ஒவ்வொன்றும் 10ரூபாய்க்கு கொடுக்கப் படுகிறது.

தேவைப்படுவோர் தேவைப்படும் விதைகளை மட்டும் வாங்கிக் கொள்ளவும். வேலைப்பளு இருப்பதால் வாரம் ஒரு முறை புதன்கிழமை மட்டுமே விதைகளை அனுப்பி வைக்கப்படும்.. தமிழகத்திற்குள் கொரியர் செலவு 50 ரூபாய்..

மொத்த விதைகள் தேவை என்றாலும் அனுப்பி வைக்கப்படும்.

110க்கும் மேற்பட்ட விதைகள் உள்ளன.. எங்களிடமுள்ள மொத்த விதைகளும் தேவைப்படுமாயின் ரூ.1100 என்று கொடுக்கின்றோம்.

விதைகளுக்கு பணம் செலுத்த
Acc no:912010045000240
name:A.Parameshwaran
BANK: axis bankbranch:KETHAIURAMBU,­ODDANCHATRAM
ifsc:UTIB0001745
micr:625211005

பணம் செலுத்ததிய ரசீதை paramez.zurich@gmail­.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டு 8526366796 எண்ணிற்கு தெரியப்படுத்தவும் ...
மின்னஞ்சலில் பணம் செலுத்திய ரசீதுடன் தங்களுடைய முகவரி மற்றும் கைபேசி எண்ணையும் அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறேன்..­!

நன்றி.. பரமேஸ்....

தகவல்களுக்கு 8526366796

விதைப்பந்து

விதைப்பந்து:

இவை சாப்பிடும் திண்பண்டம் இல்லை.

மண் மற்றும் உரம் அல்லது பசுஞ்சாணத்தால் ஆன உருண்டை.

இவற்றின் நடுவே மர விதை. உள்ளது.

செம்மண்ணில் பாதியளவு சாணத்தை கலந்து நீரூற்றி பிசைந்து உருண்டையாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

அதன் நடுவே நீங்கள் சேகரித்த விதைகளை வைத்து உருண்டையாக்கி விடுங்கள்.

சூரிய வெப்பத்தில் ஒரு நாள் காய்ந்தால் அது இறுகி விடும்.

நீங்கள் வெளியே செல்லும் போது மரம் நட வாய்ப்புள்ள இடங்களில் வீசி செல்லுங்கள்.

அவ்விதை மழை வரும்வரை எலி, எறும்பு, குருவிகளிடமிரிந்து பாதுகாப்பாய் இருக்கும்.

ஒரு வருடம் வரை விதை பத்திரமாக முளைக்க ஏற்றதாக இருக்கும்.

விதைகளைப் பொருத்தவரை சில நாட்களுக்கு தேவையான சத்துக்கள் விதையிலேயே வைக்கப்பட்டிருக்கும்.

எனவே சில நாட்களுக்குப்பின் உரம் தேவைப்படும். மண்ணில் கலந்துள்ள சாணமானது மண்ணில் நுண்ணுயிர்களை உருவாக்கி செடியின் வேர் மண்ணில் எளிதில் செல்ல ஏற்ற வகையில் பக்குவப்படுத்தி விடும்.

மண்ணின் கடினத்தன்மையை அகற்றி மிருதுவாக்கி விடும்.

சாணத்தை உண்ணும் நுண்ணுயிர்களின் கழிவை செடியின் வேர் உண்டு தன்னை அம்மண்ணில் நிலைப்படுத்திக் கொள்ளும்.

ஆனால் வெறும் விதைகளை விதைத்தால் அவை மற்ற உயிரிணங்களால் உணவாக்கப்படலாம். வெப்பத்தால் தன் முளைக்கும் தன்மையை இழந்து விடலாம்.

நிலமானது செடி வளர்வதற்கான தன்மை இல்லாமல் கடினமானதாக இருக்கலாம்.

அதனால் விதை முளைக்காது. ஆனால் விதைப்பந்தில் தண்ணீர் பட்டவுடன் இளகுவதுடன் நுண்ணுயிர்களை உண்டாக்கி நிலத்தை உழுது இளகுவாக்கி விடம்.

எனவே உங்கள் வீடுகளில் சிறிது செம்மண் மன்றும் சாணத்தை சேகரித்து வையுங்கள். பழங்களை சாப்பிட்ட பின் நல்ல விதைகளை எடுத்து சேகரித்து வையுங்கள்.

ஓய்வு நேரத்தில் விதைப்பந்தை உருவாக்கி வைத்து வெளியே செல்லும் போது நல்ல இடம் பார்த்து வீசி விடுங்கள்.

SIze of seed ball shall be just twice that of the seed, not more than 3 times the size of the seed.                                                            

The dung shall be from a country cow, for effective microbiological growth.                                    

Some coconut fibre shall also be added to the mixture of cow dung and red soil, to improve bonding, to reduce crack in the ball, to improve moisture retention, for the baby plant.